மாவட்ட செய்திகள் | 30-11-2024 | District News | Dinamalar
சேலம் மாவட்டம், ஆத்தூர் சின்ன கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது விவசாய கிணற்றில் மின் மோட்டரில் இருந்த ஒயர் திருடு போனது. அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த நடராஜன் மின் மோட்டார் ஒயரை திருடி செம்பு கம்பியை விற்றுவிட்டு கேபிளை குப்பைத் தொட்டியில் போடுவதை சிலர் பார்த்தனர். நடராஜனை பிடித்து விசாரி்த்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லி தப்பிக்க முயன்றார். பொதுமக்கள் நடராஜனுக்கு தர்ம அடி கொடுத்து ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளில் பல்வேறு இடத்தில் மோட்டாரில் மின் ஒயர் திருடி வந்தது தெரிய வந்துள்ளது.
நவ 30, 2024