உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 09-03-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 09-03-2025 | Short News Round Up | Dinamalar

சசிகாந்த் செந்தில் கருத்துக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தான் என்ன பேசினேன் என்ற வீடியோவை வெளியிட்டு அண்ணாமலை கூறியிருப்பதாவது: ஹிந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாக திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும். நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தை கொண்டு வருவது தானே நியாயமான சமூக நீதி. பத்து வருடமாக அரசு பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமில்லை. உங்கள் கூட்டணி கட்சி தி.மு.கவுக்கும் வெட்கமில்லை.

மார் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !