/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 07-08-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 07-08-2024 | Short News Round Up | Dinamalar
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா மூன்று வெண்கலப்பதங்கள் பெற்ற நிலையில், மகளிருக்கான மல்யுத்த போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு நெருங்கி வந்ததால் நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், முதல் முறையாக ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை போகத்துக்கு கிடைத்தது. ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆக 07, 2024