செய்தி சுருக்கம் | 01 PM | 23-09-2024 | Short News Round Up | Dinamalar
இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 2022ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தல் என்பதால் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணும் பணி துவங்கியது. ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச, அநுரா குமார திசநாயக ஆகிய 3 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரா குமார திசநாயக வெற்றி பெற்றாா். சஜித் பிரேமதாச 2ம் இடமும், ரணில் விக்ரமசிங்கே 3-வது இடமும் பிடித்தனர். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.