உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 04-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 04-10-2024 | Short News Round Up | Dinamalar

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிக்காக 2020ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய, மாநில அரசு நிதியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கேட்டு இருந்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் அவை கூட்டத்தில், 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வேகமாக வளர்ந்து வரும் நகரான சென்னை மிக முக்கிய பொருளாதார மையம். நகரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம் மெட்ரோ ரயில் திட்டம் 2027ல் முடியும் என கூறினார்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை