உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 02-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 02-11-2024 | Short News Round Up | Dinamalar

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக வேலைபார்த்து வந்தனர். ஷொர்ணுார் பகுதியில், பாரதபுழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் குப்பைகளை அகற்றி கொண்டிருந்தனர். அப்போது டில்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. அனைவரும் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் 4 பேரும் இறந்தனர். இதில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராணி, வள்ளி, லட்சுமணன் என தெரியவந்துள்ளது. மற்றவர் பற்றிய விபரம் வெளியாகவில்லை. மற்றொருவரின் உடலை தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட உடல்கள் பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை