/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 23-01-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 23-01-2025 | Short News Round Up | Dinamalar
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய மசோதாவை சட்டசபையில் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த புதிய சட்டதிருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, நிறைவேற்றப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் மாற்றப்பட்டு இருந்தது. மசோதாவை கவர்னர் ரவிக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இன்று இந்த மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மசோதா ஜனாதிபதி முர்முவுக்கு அனுப்பப்பட உள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பிறகு சட்டம் ஆகும். பின் நடைமுறைக்கு வரும்.
ஜன 23, 2025