செய்தி சுருக்கம் | 08 AM | 24-01-2025 | Short News Round Up | Dinamalar
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைதானார். சிறப்பு புலனாய்வு குழு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன் விசாரணையின் போது ஞானசேகரன் வலிப்பு ஏற்பட்டது போல தரையில் புரண்டார். அதிகாலை 3 மணி அளவில் ஸ்டான்லி அரசு மருத்துவனையில் போலீசார் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது துாக்கமின்றி சோர்வாக காணப்பட்டுள்ளார். வலிப்பு நோய் வந்ததற்கான அறிகுறிகள் இல்லை. இரவு முழுதும் துாங்க வைத்து, நேற்று காலை 4.30 மணியளவில் மீண்டும் பரிசோதனை செய்தனர். அவர் நல்ல நிலையில் இருப்பதும், வலிப்பு வரவே இல்லை என்பதும் உறுதியானது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விசாரணையில் இருந்து தப்பிக்கவே வலிப்பு வந்தது போல நடித்துள்ளார். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் மீண்டும் விசாரணையை துவக்கினர். இதன் தொடர்ச்சியாக ஞானசேகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த போலீசார் சிக்கி உள்ளனர்.