/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 PM | 28-01-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 28-01-2025 | Short News Round Up | Dinamalar
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 2 சட்டத்திருத்த மசோதாக்களை கொண்டு வந்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும், மீண்டும் ஒருவர் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சட்டத்திருத்தத்துக்கு கவர்னர் ரவி கடந்த வாரம் ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்து சட்ட திருத்தம், அரசிதழில் வெளியானது. இந்த சட்டம் ஜனவரி 25 முதல் அமலுக்கு வந்துவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜன 28, 2025