உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 08-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 08-11-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai சென்னையில் இருந்து காலை 10 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 172 பேருடன் டில்லி புறப்பட தயாரானது. ஓடுபாதையில் ஓடிக்கொண்டு இருந்தபோது, திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். விமானத்தை இயக்குவது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி உடனடியாக ஓடுபாதையிலேயே நிறுத்தினார். சென்னை ஏர்போர்ட் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். விமானி துரிதமாக செயலபட்டு விமானத்தை நிறுத்தியதால்,164 பயணிகள் உட்பட 172 பேர் உயிர் தப்பினர். ஓடுபாதையில் நிறுத்திய ஏர் இந்தியா பயணிகள் விமானத்தை இழுவை வண்டிகள் மூலம் விமானம் நிற்க வேண்டிய இடத்திற்கு இழுத்து சென்று நிறுத்தினர். விமான பொறியாளர் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த எஞ்சினை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக முயற்சி செய்தும் கோளாறு சரியாகாததால் பயணிகள் விமான ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் பழுதுபார்க்கப்பட்டு மாலை 5 மணிக்கு டில்லி புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாததால், 10 மணி நேரம் தாமதமாக, இரவு 8 மணிக்கு, டில்லி புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், கடும் வாக்குவாதம் செய்ததால், சிலர் இண்டிகோ, விஸ்தாரா, மற்ற ஏர் இந்தியா விமானங்களில் டில்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சில பயணிகள், பயணத்தை ரத்து செய்துவிட்டனர். கடைசியாக சுமார் 40 பயணிகள் மட்டுமே, அதே விமானத்தில் டில்லி செல்ல சென்னை ஏர்போர்ட்டில் காத்திருக்கின்றனர். ஏர் இந்தியா விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு குறித்து, டில்லி டி ஜி சி ஏ முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ