உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / வெற்றி பெற்றோருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது | Athletics Competition | Tirupur

வெற்றி பெற்றோருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது | Athletics Competition | Tirupur

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய தடகள சம்மேளனம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அஸ்மிதா அத்லெடிக்ஸ் லீக் என்ற பெயரில் 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்து திருப்பூர் தடகள சங்கத்தால் மாவட்ட அளவில் இன்று நடைபெற்ற போட்டிகள் திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி வளாகம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகள ஸ்டேடியத்தில் நடந்தது. திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மூத்த தடகள வீரரும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

நவ 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை