மாநில அணிக்கு 28 பேர் தேர்வு | SGFI Basketball and Cricket Competitions | 28 players selected for th
மாநில அணிக்கு 28 பேர் தேர்வு | SGFI Basketball and Cricket Competitions | 28 players selected for the state team | T.E.A. Public Matric Hr Sec Scl | Tiruppur திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரையில் உள்ள டீ பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில் இந்தியப் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் மாநில கூடைப்பந்து மற்றும் கிரிக்கெட் அணிக்கான போட்டி தேர்வு நடைபெற்றது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் துவக்கி வைத்தனர். 19 வயது மாணவியர் கூடைப்பந்து போட்டியில், எட்டு மண்டலங்களை சேர்ந்த, 48 பேர். 17 வயது மாணவர் கிரிக்கெட் போட்டியில் 218 பேர் போட்டி தேர்வில் பங்கேற்றனர். முதற்கட்ட தேர்வு போட்டியில் கிரிக்கெட்டில் 16 பேர் மற்றும் கூடைப்பந்தில் 12 பேர் மாநில அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.