உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / புதுக்கோட்டை, மதுரை அணியினர் தங்கம் வென்று அசத்தல் | Tiruchi | Roller Hockey Tournament

புதுக்கோட்டை, மதுரை அணியினர் தங்கம் வென்று அசத்தல் | Tiruchi | Roller Hockey Tournament

திருச்சி வடுகப்பட்டியில் 35 வது மாநில அளவிலான ரோலர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது. திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர். போட்டியில் சிறுவர், சிறுமியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் உள்ளிட்ட 40 அணிகள் களம் இறங்கினர். சிறுவர்கள் மற்றும் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என இருபாலருக்குமான போட்டிகள் நடைபெற்றது. புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினர். 4 நாட்கள் நடைபெற்ற போட்டியில் இன்லைன் ஹாக்கி போட்டியும் நடைபெற்றது. இதில் மாநில அளவில் பங்கேற்று விளையாடிய சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

அக் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ