உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / அம்மாடியோவ்! 97 ஆண்டு பாரம்பரியம்

அம்மாடியோவ்! 97 ஆண்டு பாரம்பரியம்

''ஆப்பிரிக்காவில் 'ரொடிஷியன் ரிட்ஜ் பேக்' வகை நாய் சிங்கத்துக்கு இணையாக புகழப்படுகிறது. இதற்கு, 97 ஆண்டு பராம்பரிய பின்னணி இருப்பதாலே, நீண்ட தேடல் வேட்டைக்கு பிறகு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வாங்கினேன்,'' என்கிறார் கோவையை சேர்ந்த விவேக்.

அப்படி என்ன ஸ்பெஷல் என்றதும், இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

ரொடிஷியன் ரிட்ஜ்பேக் (Rhodesian Ridgeback) பப்பியின் பூர்வீகம், ஆப்பிரிக்கா. இது, 1800களிலேயே, அங்கு வளர்க்கப்பட்டதாக கூறப்பட்டதாலும், 1927 ல் தான், 'சவுத் ஆப்பிரிக்கன் கென்னல் யூனியன்', இந்த பப்பியின் தனித்துவம், உடலமைப்பை முறையாக ஆய்வு செய்து, பதிவு செய்தது. பொதுவாக நாய்களுக்கு, அதன் தோள்பட்டை நீளத்தை பொறுத்தே உயரம் கணக்கிடப்படும்.இது, அதிகபட்சம் 60-74 செ.மீ., உயரம் வரை வளரும். 30-35 கிலோ எடை கொண்டது. இதன் முதுகுதண்டுவடத்தில், குறிப்பிட்ட பகுதியில், முடி எதிர்திசையில் வளர்ந்திருக்கும். இது, வேறு எந்த ப்ரீடிலும் இல்லாத தனித்தன்மை. இதற்காகவே, 'ரிட்ஜ்பேக்' என்ற பெயர் இணைக்கப்பட்டுள்ளது.வேட்டையாடுவதில் அசாத்திய திறன் கொண்டது. ஆப்பிரிக்க நாட்டின் காவல், ரோந்து, ராணுவப்பணிகளுக்கு, இந்த வகை பப்பியை தான் பயன்படுத்துகின்றனர். ஒரு காட்டில், சிங்கத்தின் ஆளுமைக்கு நிகரான, வலிமை கொண்டது என்பதால், இதற்கு, 'ஆப்பிரிக்கன் லயன் ஹவுண்ட்' என்ற அடைமொழியும் உண்டு. காவலுக்கு கெட்டிக்காரன்.பெரிய உருவம், வேட்டையாடுவதில் தனித்திறன் கொண்ட இதை, செல்லப்பிராணியாக வளர்த்தால், குழந்தைமாதிரி மாறிவிடும். வீட்டிலுள்ளோரிடம் எளிதில் நெருங்கிவிடும். எந்த பயிற்சியையும் எளிதில் கற்று கொள்ளும். உரிமையாளரின் குரலுக்கு கட்டுப்படும்.இதன் தனித்தன்மை அறிந்து, நீண்ட தேடல் வேட்டைக்கு பிறகு, உக்ரைன் நாட்டில் இருந்துஇறக்குமதி செய்து வாங்கினேன். தோட்டம், பாதுகாவலுக்கு பப்பி வாங்குவோர் இந்த ப்ரீட் தேர்வுசெய்வது பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !