துாங்கு ராசா; துாங்கு!
வீட்டில், ஒரு பூனையை வளர்த்தால்,அது தான் எஜமானன் மாதிரி நடந்து கொள்ளும். உரிமையாளர் அந்த பூனையாருக்கு சேவை செய்ய வேண்டும். ஒரு குழந்தை மாதிரி, இதற்கு தேவையானதை செய்து கொடுத்தாலும், கொளுத்தும் வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல், அது அங்கும் இங்கும் உலவிக்கொண்டே இருக்கும்.சிறிது நேரம் கூட துாங்காமல் அடம்பிடிக்கும் உங்க மியாவுக்கு, இந்த ஊஞ்சலை வாங்கி கொடுத்து அசத்துங்க. இலவம்பஞ்சு கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், இதை மாட்டிவிட்டு, ஏசி.,யோ, பேன் சுவிட்சையோ போட்டு விட்டால் நிம்மதியாக துாங்கும்.மல்லாக்க படுத்துட்டு விட்டத்த பாக்குற சுகமே தனி தான் போல!