உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே /  கோழிக்கோடு டாக் ஷோ

 கோழிக்கோடு டாக் ஷோ

கோழிக்கோடு கென்னல் கிளப் சார்பில், தளக்குளத்துாரில் உள்ள இ.எம்.எஸ்., ஸ்டேடியத்தில், நாய் கண்காட்சி வரும் 24, 25 ம் தேதிகளில் நடக்கிறது. ஒவ்வொரு இன நாய்களின் தனித்திறனை அங்கீகரித்து, அதை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் நோக்கில், நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன்படி கோழிக்கோடு கென்னல் கிளப்பின் 15, 16வது சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி வரும் 24 ல் துவங்குகிறது. அனைத்து இன நாய்களுக்கான கண்காட்சியோடு, டாபர்மேன், பாக்ஸர், டச்ஹவுண்ட் இன நாய்களுக்கு பிரத்யேகமாக, அந்தந்த கிளப் சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் உங்கள் பப்பியை பங்கேற்க செய்வதற்கு, www.dogsnshows.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம். கண்காட்சி, காலை 9:30 மணி முதல்மாலை 5:30 மணி வரை நடக்கும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சந்தோஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !