உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / கடலுக்குள் ஒருநாள்!

கடலுக்குள் ஒருநாள்!

நீ ச்சல் உடை, ஆக்ஸிஜன் சிலிண்டர், மாஸ்க் என எதுவுமில்லாமலே, கடலுக்கடியில் மீன்களோடு மீன்களாய், நீங்களும் நீந்தும் பரவச அனுபவம் பெற, கேரளா, சாவக்காடு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மெரைன் வோல்டு அக்வாரியம் செல்லலாம். கிட்டத்தட்ட 3 - 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இந்த அக்வாரியம். கேரளாவில், பொதுமக்களை அனுமதிக்கும் வகையில் மிகப்பெரிய அக்வாரியமாக இது உள்ளது. இதற்குள் சென்றால், கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட வகைகளில், 3 லட்சத்திற்கும் அதிகமான மீன்களை காணலாம். ஒவ்வொரு அரிய வகை மீன்களின் பெயர், அதன் பிறப்பிடம், சிறப்பு பற்றிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஒரு காருக்குள் மீன்கள் நீந்தினால் எப்படியிருக்கும் என்ற கற்பனை உங்களுக்கு இருந்தால், அதை நேரடியாக இங்கே காணலாம். கண்ணாடியால் ஆன மிகப்பெரிய சிலிண்டரில் துாண் நடப்பட்டு, அதற்குள் மீன்கள் நீச்சலடிக்கின்றன. குகை போன்ற வடிவமைப்பில், கண்ணாடியை பொருத்தி, மிகப்பெரிய அளவிலான மீன்களை நீந்த விட்டிருக்கின்றனர். அவை உங்களை நோக்கி பாய்ந்து வரும் போது, ஒருவித சிலிர்ப்பை உணரலாம். மீன் தொட்டிக்குள் கால்வைத்து, அவை முத்தமிட்டு உரசி செல்வதை அனுபவிக்கலாம். அங்குள்ள மீன் குளத்தில், ஆரஞ்சும், வெள்ளையும் கலந்த நிறத்தில் பளீச்சென மின்னும், 'கொய்' இன மீன்களுக்கு நீங்களே உணவளிக்கலாம். இங்கு, மிகப்பெரிய மீன்கள் முதல் சிறிய மீன்கள் வரை அனைத்தையும் காணலாம். ஷார்க், கர், அரபைமா, கேட்பிஷ், லயன் பிஷ், ஈல், பிரன்ஹா, ஸ்டார் பிஷ் என வெளிநாட்டில் இருக்கும் வித்தியாசமான மீன்கள், உங்களை வரவேற்க காத்திருக்கின்றன. அக்குவாரியத்திற்குள் மீன்களோடு நீந்திய பிறகு, அருகே இருக்கும் பறவை பார்க்கிற்குள் சென்று, செல்பி எடுத்து கொள்ளலாம். குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவும் உள்ளது. ஒருநாள் முழுக்க, வித்தியாசமான சூழலில், மீன், பறவைகளோடு கண்டு ரசிக்க, ஏற்ற இடமாக உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு: marineworld.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி