உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும்!

ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும்!

'மியாவ்' என சத்தமிட்டு கொண்டே, உங்களை சுற்றி சுற்றி வரும் பூனைக்குட்டி, ஒய்யாரமாய் ஓய்வெடுக்கவும், குதித்து விளையாடவும், மார்கெட்டில் வலம் வரும், புதிய புராடெக்ட் தான் இந்த 'குஷன் ட்ரீ'.உங்க செல்லக்குட்டி தாவி குதிக்க வசதியாகவும், அது கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்கும் வகையிலும், வெல்வெட் துணியால், குஷன் உருவாக்கப்பட்டுள்ளது. கிளைகளுடன் மரம் மாதிரி இருக்கும், இந்த குஷன் ட்ரீயில் குதித்து, நீண்டநேரம் விளையாடி, சோர்ந்து போய் விட்டால், அதிலே படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்.நீங்கள் வீட்டிலில்லாத போதும், பிசியாக வேலை செய்து கொண்டிருக்கும் போதும், உங்களை விளையாட அழைக்காமல் இருக்க வேண்டுமெனில், இதுபோன்ற வித்தியாசமான பொம்மைகளை வாங்கி கொடுத்து அசத்துங்க. இந்த குஷன் ட்ரீ நிறைய கலர்களில் கிடைப்பதால், ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி