சென்னையில் இன்று டாக் ஷோ
'தி மெட்ராஸ் கெனைன் கிளப்' சார்பில், 150வது டாக் ஷோ, மயிலாப்பூரில் இன்று துவங்குகிறது. நாளையுடன் நிறைவடைகிறது. நாய் இனங்களின் மரபு ரீதியான திறன்களுக்குமேடை அமைத்து தரும் வகையில், கண்காட்சி நடத்துதல், செல்லப்பிராணி வளர்ப்போரைஒன்றிணைத்தல், ஊக்குவித்தல் போன்ற பல்வேறுசெயல்பாடுகளில் முன்னோடியாக இருந்து வருகிறது, 'தி மெட்ராஸ் கெனைன் கிளப்'. அதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்துடன், 148,149, 150வது நாய் கண்காட்சி என, பல்வேறு நிகழ்ச்சிகள், இன்று (ஜன. 31ம் தேதி), மயிலாப்பூர், செயின்ட் பெடஸ் பள்ளி மைதானத்தில் துவங்குகிறது. நாளை வரை நிகழ்ச்சி நடக்கிறது. இதில், மாநிலம் முழுக்க, பல்வேறு இன நாய்கள் பங்கேற்பதோடு, செல்லப்பிராணி தொடர்புடைய பல்வேறு துறை வல்லுநர்களும் கலந்து கொள்கின்றனர். பார்வையாளராக பங்கேற்று, செல்லப்பிராணிகளை ரசிக்கலாம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சித்தார்த்தா தெரிவித்தார்.