மேலும் செய்திகள்
மாமூல் வசூலிக்கும் சார் யாரு?
11-Nov-2025
ஆளுங்கட்சி ஆதரவால் தப்பிய போலீஸ் தலைகள்
20-Oct-2025
வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா... எலக்சன் ஸ்பெஷல் நியூஸ் இருக்கா...'' என, கேட்டாள்.'தி.மு.க.,வுல நேர்காணல் நடத்துனாங்களே... என்னாச்சுன்னு விசாரிச்சியா...''''விசாரிக்காம... இருப்பேனா... நம்மூர்ல இருந்து, 20க்கும் மேற்பட்டவங்க கலந்துக்கிட்டாங்களாம். சி.எம்., ஸ்டாலினுக்கு முன்னாடி இருந்த இருக்கையில உட்காரச் சொன்னாங்களாம். முதல் கேள்வியாய்... 'நீங்க... எந்த ஜாதி...'ன்னு கேட்டதும், நேர்காணலுக்கு போனவங்க அதிர்ந்திருட்டாங்களாம்,''''மேடைக்கு மேடை பகுத்தறிவு பேசுற கட்சி அலுவலகத்திலா, நாம் உட்கார்ந்திருக்கிறோம்னு ஒரு நிமிஷம், தங்களையே கிள்ளிப் பார்த்துக்கிட்டாங்களாம்... இருந்தாலும், 'சீட்' வாங்கணுமேன்னு, ஒருத்தரு... 'நான் செட்டியாரு... என் மனைவி கவுண்டரு'ன்னு மூணு தடவை அழுத்திச் சொன்னாராம்,'' அட்வைஸ் மழை
''ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு நம்மூர் 'பொறுப்பு' அட்வைஸ் மழை பொழிஞ்சாராமே...''''அதுவா, மாசம் மாசம் பணம் கொடுக்கறதா சொன்னதுல, ரெண்டு மாசம் கொடுத்துட்டாங்களாம். 'கட்டடம் கட்டுறவுங்க, கான்ட்ராக்டர்கள்கிட்ட கை நீட்டக்கூடாது. தேர்தல் வேலையை நல்லாப் பாருங்க. தலைமையில இருந்து 'கவனிச்சிட்டு' இருக்காங்க. உள்ளடி வேலை பண்றது; உளவு வேலை பார்க்கிறது; கரன்சியை அமுக்கிற வேலையெல்லாம் பண்ணக்கூடாது'ன்னு சீரியசா அட்வைஸ் பண்ணிருக்காராம்,'' 'ஸ்டேட்டஸ்' நீக்கம்
''நம்மூரை சேர்ந்த ஆளுங்கட்சி மகளிரணி மேடம் ஒருத்தவங்க, புதுச்சேரிக்கு போயி, கவர்னர் தமிழிசையிடம் விருது வாங்குனாங்களாமே...''''ஆமாக்கா... உண்மைதான்! 'வாட்ஸ்அப்'ல ரெண்டு நாள் ஸ்டேட்டஸ் வச்சிருந்தாங்களாம். மேயர் வேட்பாளருன்னு ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சு, 'மாவட்டத்துடன்' ஏழரையாகி, கட்சியை விட்டு, கொஞ்ச நாளைக்கு விலகி வச்சிருந்தாங்களே, அவுங்கதான், அந்த மேடம். மறுபடியும் கட்சியில சேர்ந்து, முக்கிய பதவியை கைப்பத்திட்டாங்க. இப்போ, புதுச்சேரி கவர்னரிடம் விருது வாங்கியிருக்காங்க,''''இவருடைய கணவர், ரெண்டெழுத்து மினிஸ்டருக்கு வேண்டப்பட்டவரா இருக்கறதுனால, கோவில் அறங்காவலர் குழு தலைவரா நியமிச்சிருக்காங்க, தமிழிசையிடம் விருது வாங்குன தகவல் தலைமைக்கு தெரிஞ்சா, கணவருக்கு சிக்கலாயிடப் போகுதுன்னு உடன்பிறப்புகள் கொளுத்திப் போட்டுட்டாங்க. அதனால, 'ஸ்டேட்டஸ்' படத்தை மறுநாளே நீக்கிட்டாங்களாம்,'' வர்றாரு மோடி
''தேர்தல் பிரசாரத்துக்கு நம்மூருக்கு பிரதமர் மோடி வரப் போறாராமே...''''பல்லடத்துல நடந்த மீட்டிங் தாமரைக் கட்சியினருக்கு 'பூஸ்ட்' மாதிரி இருக்கு. தி.மு.க.,வினரை 'அட்டாக்' பண்ணி, நெல்லையில மோடி பேசுனது, ஆளுங்கட்சியினரை உசுப்பேத்தியிருக்கு. அதனால, மூன்றாம் முறையா தமிழகத்துக்கு வர்றாரு. 15ம் தேதி சேலத்துக்கு போறாரு; 16ம் தேதி கன்னியாகுமரி போயிட்டு, 18ம் தேதி நம்மூருக்கு வர்றாரு. அதனால, தாமரை கட்சிக்காரங்க குஷியாகிட்டாங்க,''''கொடிசியா அரங்கு பக்கத்துல இருக்குற மைதானத்துல பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துறதுக்கு ஏற்பாடு செய்யப் போறாங்களாம். இங்க பிரதமர் மோடி, என்ன வெடி போடப்போறாரோன்னு ஆளும் தரப்பு பரபரப்பா இருக்காம்...''கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. பிரம்மாண்டமா 'ரோடு ஷோ' நடத்துறதுக்கும் 'பிளான்' போட்டிருக்காங்க. இதுக்கான வேலையை தாமரை கட்சிக்காரங்க இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களாம்...'' உடன்பிறப்புகள் இணக்கம்
''தாமரைக்கட்சிக்காரங்களோடு உடன்பிறப்புகள் இணக்கமா இருக்கறதா சொல்றாங்களே... உண்மை தானா...''''அது... காரமடை ஏரியாவுல நடக்குது. அங்கிருக்கிற தி.மு.க., நிர்வாகிகளிடம் 'கசமுசா' இருக்கு. நகர செயலாளருக்கும் மத்த நிர்வாகிகளுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்குதாம். லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டு வாங்கிக் கொடுத்தா, கட்சி நிர்வாகிகளுக்கே நல்ல பெயர் கிடைக்கும்; நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லைன்னு புலம்பியிருக்காங்க,''''இதை கேள்விப்பட்ட தாமரைக்கட்சிக்காரங்க, உடன்பிறப்புகளிடம் ரகசியமா 'டீல்' போட்டிருக்காங்க. ஆளுங்கட்சி ஓட்டுகளை தாமரைக்கு தள்ளி விடச் சொல்லியிருக்காங்களாம்; அவுங்களும் சரின்னு சொல்லி இருக்காங்களாம்... அதனால, காரமடை ஏரியாவுல ஆளுங்கட்சி தயவுல தாமரைக்கு அதிகமான ஓட்டு விழும்னு பேசிக்கிறாங்க...'' மய்யத்தினர் கவலை
''லோக்சபா தேர்தலில் போட்டியிடலைன்னு கமல் ஜகா வாங்கிட்டாரே; கட்சிக்காரங்க என்ன சொல்றாங்க...''''உதயநிதியோடு இருக்கற நெருக்கத்துல, தி.மு.க., தலைமையிடம் அவரும் முட்டி மோதி பார்த்தாரு; முடியலை. உதயசூரியன் சின்னத்துல போட்டியிடச் சொன்னதால ரொம்பவே 'அப்செட்' ஆகிட்டாரு. அதனால தான், போட்டியிடவே வேண்டாம்னு முடிவு செஞ்சிட்டாராம்...''''நம்மூர்ல போட்டி போடுவாருன்னு கனவு கண்ட மய்யம் கட்சிக்காரங்க மனசு ஒடிஞ்சு போயிட்டாங்களாம். 2026 சட்டசபை வரைக்கும் கட்சியே இருக்குமான்னு புலம்புறாங்க. இப்பவே, அ.தி.மு.க.,வுல இருந்தும், பா.ஜ., தரப்புல இருந்தும் கட்சியை உடைக்கற வேலையை ஆரம்பிச்சிட்டாங்களாம். தேர்தலுக்குள்ள முக்கிய நிர்வாகிகள் யாரையாவது துாக்குறதுக்கு 'டீல்' பேசிக்கிட்டு இருக்கறதா மய்யம் கட்சியினர் பேசிக்கிறாங்க,'' என பேசிக்கொண்டே, நகர்வலம் செல்ல ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா. பேரனுக்கு கல்வெட்டு
பின்இருக்கையில் அமர்ந்துகொண்ட சித்ரா, ''தாத்தாவுக்கு வைக்காத கல்வெட்டை, பேரனுக்கு வச்சிருக்காங்களாமே...'' என கேட்டாள்.''அதுவா... கருணாநிதி முதல்வரா இருந்தப்போ, நம்மூர்ல நேரு ஸ்டேடியம் கட்டுனாங்க. இது சம்பந்தமா, கல்வெட்டு பதிக்கலை. ஆனா, அ.தி.மு.க., ஆட்சியில போட்டிருந்த சிந்தடிக் டிராக்கை பெயர்த்தெடுத்துட்டு, மறுபடியும் புதுசா டிராக் அமைச்சதை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, பயன்பாட்டுக்கு திறந்து வச்சாரு. இதுசம்பந்தமான கல்வெட்டு, ஸ்டேடியம் நுழைவாயில் பக்கத்துல பெருசா வச்சிருக்காங்க. இதை பார்க்கும் விளையாட்டு வீரர்கள், நமட்டுச் சிரிப்பு சிரிச்சுட்டு போறாங்க,'' பரவுது உத்தேச பட்டியல்
''அ.தி.மு.க., தரப்பிலும் நேர்காணல் நடந்துச்சே...''''அதெல்லாம்... கட்சிக்காரங்களை திருப்தி செய்றதுக்கும்; கட்சிக்கு நிதி திரட்டுற வேலைக்காகவும் செய்றது. தலைமை நிர்வாகிகள் கூடி பேசி, வேட்பாளர்களை இறுதி செய்வாங்க. இப்போ, 39 தொகுதிக்கும் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கு; சமூக வலைதளத்துல பரவிட்டு இருக்கு,''''மேயர் வேட்பாளருன்னு சொன்ன, வடவள்ளிக்காரரின் மனைவி பெயர் அடிபடுது; பொள்ளாச்சிக்கு பேச்சாளரின் பெயரை சொல்றாங்க... சமீபகாலமா அ.தி.மு.க., சார்புல நடக்குற கூட்டங்கள்ல பேச்சாளருக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. வடவள்ளிக்காரர் போட்டியிட தயங்குனா, பேச்சாளரை நிறுத்துறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க,'' என்றபடி, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கார்ப்பரேஷன் ஆபீசுக்குள் நுழைந்தாள் மித்ரா. காரை மறிச்சு போராட்டம்
''கார்ப்பரேஷன் கமிஷனரை காரை வழிமறிச்சு போராட்டம் நடத்துனாங்களாமே...''''துாய்மை பணியாளர்களுக்கு தொழிற்சங்கத்தினர், கமிஷனரிடம் கோரிக்கைகளை முறையிடுறதுக்காக ரொம்ப நேரமா 'வெயிட்' பண்ணிட்டு இருந்தாங்க. அவரோ, கார் ஏறி, வேறொரு நுழைவாயில் வழியா, 'எஸ்கேப்' ஆக பார்த்தாரு. துாய்மை பணியாளர்கள் ஓடிப்போயி, அவரது காரை மறிச்சிருக்காங்க,''''இந்த விவகாரத்துல, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததா, துாய்மை பணியாளர்கள் மீது, கமிஷனர் கார் டிரைவர் புகார் கொடுத்ததாச் சொல்லி, போலீஸ் ஸ்டேஷன்ல வழக்கு பதிவு செஞ்சுருக்காங்க. அதனால, துாய்மை பணியாளர்கள் பலரும் கார்ப்பரேஷன் மீது கடும் அதிருப்தியில இருக்காங்க,'' என்ற மித்ரா, சொத்து வரி செலுத்த சென்றாள். அவளை பின்தொடர்ந்து சென்றாள் சித்ரா.
11-Nov-2025
20-Oct-2025