உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா... மித்ரா ( கோவை) / புது டிசி வீட்டுக்கு கிடைச்சது ஏசி; இன்ஸ்., வீட்டுக்கு பார்சல்ல போகுது காபி!

புது டிசி வீட்டுக்கு கிடைச்சது ஏசி; இன்ஸ்., வீட்டுக்கு பார்சல்ல போகுது காபி!

மருதமலை சென்று திரும்பும் வழியில், வடவள்ளியில் ஒரு பேக்கரியில் டீ குடிக்க நுழை ந்தனர் சித்ராவும் மித்ராவும். டீயும் தேங்காய் பன்னும் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தனர். பக்கத்து டேபிளில் இரு வக்கீல்களை பார்த்த சித்ரா, ''நம்ம மாவட்டத்துல புதுசா அப்பாயின்ட் பண்ணிருக்ற 24 அரசு வக்கீல்கள்ல, பலரும் அனுபவம் இல்லாதவங்க. இதுல அ.தி.மு.க. வக்கீல்களுக்கும் சான்ஸ் குடுத்துருக்கறதால த.வெ.க. கட்சிக்காரங்க கடுகடுன்னு இருக்காங்களாம்'' என்றார். ''கட்சி நடத்றது வேற, அரசாங்கம் நடத்றது வேறேனு புரியல, பாவம். பழைய மாடல் அரசுல ரெண்டையும் ஒண்ணா நினைச்சதால தான் இப்ப ரோட்ல நிக்கிறாங்க. இத கேளுங்க... அந்த கட்சிக்காரருக்கு மினிஸ்டர் போஸ்ட் கிடைச்சதும், அவரோட சமுதாய ஆளுங்க ஒரு கார் வாங்கி குடுத்ருக்காங்களாம். சந்தோஷத்ல மிதக்குறாராம் மினிஸ்டர்'' ''அந்த பாசம் சீக்கிரமா விடாதுல்ல..'' என்று சிரித்தார் சித்ரா. ''நம்மூர் அ.தி.மு.க.வுல இருக்கற பாசக்காரங்களுக்கு, கமகம பிரியாணி விருந்து காத்திருக்குது'' ''எங்க, எப்ப, யாரு, சீக்ரமா சொல்லு..'' ''இந்த மாச கடைசில, தொண்டாமுத்துார் தொகுதில செயல்வீரர்கள் கூட்டம் நடக்குது. பத்தாயிரம் பேரு வருவாங்கனு எதிர்பார்க்கறாங்க. எல்லாருக்கும் கமகம பிரியாணி விருந்து இருக்கு. இதுவரைக்கும் நடந்த ரெண்டு கூட்டத்லயும் மாஜி கலந்துக்கலை. சொந்த தொகுதில நடக்கற கூட்டத்லயாவது கலந்துக்குவாரா, மாட்டாராங்கற எதிர்பார்ப்புல இருக்காங்க கட்சிக்காரங்க'' ''நம்ம ஊர் போலீஸ்ல சிலபேரோட எதிர்பார்ப்பு வேற..'' ''பிரியாணி பிடிக்காதா, என்ன..'' ''புதுசா வந்த ஒரு 'டிசி' வீட்ல புது ஏசி மாட்டிருக்காங்க. ஒன்றரை லட்சம் செலவு. போலீசும், இன்டெலிஜென்ஸ் விங்கும் ஷேர் போட்டு கடைக்கு குடுத்ருக்காங்க..'' ''நல்ல விஷயம் தான.. அதுக்கு என்ன?'' ''கடைக்கு பில் செட்டில் பண்ணது நல்ல விஷயம் தான். அப்றம் வருது பாரு, ட்விஸ்ட். புது ஆபீசர் முதல் ஸ்பீச்லயே, எல்லாரும் நேர்மையா வேல பார்க்கணும், மத்தவங்க காசுக்கு ஆசைப்பட கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காரு. அத கேட்ட போலீஸ்லாம், அப்ப நாம ஏசிக்கு செலவு பண்ணுன காச அய்யா குடுத்ருவாரு போலயே..னு வெயிட் பண்றாங்ளாம்..'' ''ஆனாலும் நீங்க ஓவர் தான்.. சிட்டி லிமிட்ல உள்ள ஒரு இன்ஸ்., ஆக்டிவிடீச கழுகு மாதிரி விஜிலென்ஸ் டீம் வாட்ச் பண்ணுதாமே, அப்படியா?'' ''அந்த அஞ்செழுத்து இன்ஸ்., பத்தி ரொம்ம்ப கம்ப்ளைன்ட்ஸ் வருதாம். மனுஷன் அசரலயாம். அவருக்கு காபி கூட பீளமேடு லிமிட்ல உள்ள பெரிய ஓட்டல்ல இருந்து டெய்லி வீட்டுக்கு குடுத்து அனுப்பணுமாம். இதே மாதிரி இன்னொரு பிரபல ஓட்டல்ல இருந்து பிரியாணி போகுதாம். காபி பில் 24,000 ரூபா அனுப்பினத வாங்கி பாத்துட்டு, சிரிச்சுகிட்டே கிழிச்சு போட்டாராம்..'' ''ராஜா மாதிரி வாழ்றார்னு சொல்லுங்க” ''இருப்பா, இன்னும் முடியல... நைட் 11 மணிக்கு உற்சாகமா ஸ்டேஷனுக்கு வர்றாராம்; டியூட்டியில இருக்கறவங்ககிட்ட கலெக்சன் டீட்டெய்ல்ஸ் கேக்குறாராம். அமவுன்ட் கம்மியா இருந்தா தாறுமாறா திட்டுறாராம்'' ''ஆட்டம் எப்ப வேணா நிக்கலாம், அதுக்குள்ள முடிஞ்சத வாரிக்குவோம்னு நினைக்கிறாரோ..?'' ''இருக்கலாம். ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் டீலிங் நடந்திருக்கு. பெரிய தொகை கேட்டாராம் இன்ஸ். அதிர்ந்துபோன பிசினஸ் பார்ட்டி, விஜிலென்ஸ்க்கு போயிட்டாங்க. இப்ப விஜிலென்ஸ்காரங்க பீளமேட்ல சுத்தி சுத்தி வர்றாங்க. எப்ப வேணா நியூஸ் வரும்னு சொல்றாங்க'' ''சாட்டைய கையில தூக்கினா பத்தாது, அடி விழ ஆரமிச்சா தான் வலி தாங்காம அலறுவாங்க.. வெஸ்ட் ஜோன்ல நடந்த மாதிரி, ஈஸ்ட் ஜோன்லயும் இ-சேவை மையத்துல கலெக்சன் பண்றாங்களாமே...'' ''ஆமா, சிங்காநல்லுார்ல ஈஸ்ட் ஜோன் ஆபீசுக்கு பக்கத்துல உள்ள இ-சேவை மையத்துல டீலிங் நடக்குதாம். யாருக்கு எவ்வளவு கொடுக்கணுமோ, அத இந்த மையத்துல குடுத்தா போதுமாம். பத்தாவது மினிட்ல பைல் கையெழுத்தான தகவல் வாட்சப்ல வருமாம். ஊழியர்கள் பாக்கெட்ல 500 ரூபாய்க்கு மேல இருக்க கூடாதுனு கமிஷனர் ஆர்டர் போட்டதால, இப்டி வசூல் பண்றத வெளிய வச்சிருக்காங்க...'' ''கார்ப்பரேஷன் புது கமிஷனர் கவனத்துக்கு போகுதா, இல்லையா..?'' ''போனா சும்மா இருப்பாரா..? அவரு தினமும் காலைல இன்ஸ்பெக்ஷன் போறாரு. துறை தலைவர்களுக்கு ஆலோசனைகள் சொல்றாரு. மேல்மட்ட அளவுல முடிச்சுக்றதால, பீல்டு லெவல்ல நடக்றது அவர் காதுக்கு போறதில்லையாம்'' ''அதனாலதான் ஆர்.டி.ஓ. ஆபீஸ்லயே திருட்டு நடந்திருக்கு'' ''டீட்டெயில்ஸ் ப்ளீஸ்'' ''பாலசுந்தரம் ரோட்ல இந்த ஆபீஸ் வளாகத்துல மூணு பேரு நைட்ல சரக்கு அடிச்சிட்டு துாங்கிருக்காங்க. அங்கே இருந்த கார் ஸ்பேனர், வீல் லிப்டர் னு என்னலாம் கைல கிடைச்சுதோ அத்தனையும் அள்ளிட்டு போயிட்டாங்க. கேட் பூட்டி இருந்தும் இப்டி நடந்திருக்குன்னா, உள்ள இருக்கற யாரோ சப்போர்ட் இல்லாம முடியாதுனு என்கொயரி போயிட்டிருக்கு'' - பேக்கரியில் கூட்டம் சேர, சித்ராவும் மித்ராவும் இடத்தை காலி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை