தீபாவளி வசூல் ராக்கெட் சாதித்துக்காட்ட டார்கெட்
''மித்து... வெங்கமேட்டுல மாநகராட்சியோட ரெண்டு கடைகளுக்கு ஒன்னரை வருஷமா, கடை நடத்துறவங்களுக்குப் பதிலா மாநகராட்சி நிர்வாகமே மின் கட்டணம் செலுத்தியிருக்கிறதை இப்பத்தான் கண்டுபிடிச்சாங்க. மாநகராட்சி அலுவலர் உதவி இல்லாம இது சாத்தியமே இல்ல. மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி கருப்பு ஆடுகளைக் கண்டுபிடிக்கணும்னு சொல்றாங்க''''சித்ராக்கா... அவிநாசி உள்ளிட்ட இடங்கள்ல கடைவீதிகள்ல கண்காணிப்பு கோபுரம் அமைச்சிருக்காங்க... இதுல தனியார் விளம்பரங்கள் கவர்ற மாதிரி ஒட்டியிருக்காங்களாம். கண்காணிப்பு கோபுரமே மக்கள் கவனத்தைத் திசைதிருப்பாம பார்த்துக்கறதுக்குத்தானாம். ஆனா, அதுலயே இப்படி விளம்பரங்களை வச்சிருக்காங்களேன்னு பொதுமக்கள் ஆதங்கப்படறாங்களாம்''பக்கத்து வீட்டு சிறுவர்கள், புதிதாக வாங்கிவந்த லட்சுமி வெடியை வைக்க சத்தம் அதிரவைத்தது. சித்ராவும், மித்ராவும் பேச்சை நிறுத்திவிட்டு அங்கே நகர்ந்தனர்.