உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) / கட் அடித்த எம்.எல்.ஏ; கட்டுப்பட்ட அமைச்சர்

கட் அடித்த எம்.எல்.ஏ; கட்டுப்பட்ட அமைச்சர்

சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா. ''அக்கா... நம்ம டிஸ்ட்ரிக்ட்ல, த.வெ.க.ல பழைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒரு அணியா, புதுசா கட்சிக்கு வந்தவங்க இன்னொரு அணியான்னு ஏற்கனவே பேச்சு இருக்கே... அதுக்கு சமீபத்திய பொதுக்கூட்டமும் உதாரணம்னு சொல்றாங்களாம்... ''சிவன் தியேட்டர் ரோட்ல நடந்த நுாறு நாள் சாதனை விளக்க கூட்டத்துக்கான அழைப்பிதழ், பத்திரிகை விளம்பரம், பிளக்ஸ்ல தெற்கு எம்.எல்.ஏ. பாலமுருகன், வடக்கு எம்.எல்.ஏ. சத்தியபாமா ரெண்டு பேரோட படமும் இருந்துச்சு... ''அமைச்சர் அருண்ராஜ், செங்கோட்டையன் வந்திருந்தாங்க. சத்தியபாமாவும் பங்கேற்றாராம். ஆனா, மாநகர மாவட்ட செயலாளரான பாலமுருகன் வருவாருன்னு கட்சிக்காரங்க காத்திருந்தும், கூட்டம் முடியுற வரைக்கும் வரலையாம்... 'கட்' அடிச்சிட்டாராம்'' ''மித்து... அவருக்கு வேற வேலை இருந்திருக்கலாம்ல... அரசியல்ல சில நேரம் வந்ததை விட, வராம இருந்ததுக்குத்தான் அதிக விளக்கம் தேவைப்படும்...'' ''அக்கா... அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்தப்ப, பிரகாரத்துல நடந்து கால் பொசுங்கீருச்சாம். பக்தர்களுக்கு உரிய வசதி பண்ணுங்கன்னு சொல்லீருக்காரு... ''வழக்கமா மேட் விரிக்குற இடத்துல, அவர் வந்த அன்னிக்கு மட்டும் மேட் இல்லையாம். இப்போ அங்கே கூல் பெயின்ட் அடிக்க ஆரம்பிச்சு, அந்தப் பணியை அமைச்சர் கமலி துவக்கி வச்சிருக்காரு...'' ''மித்து... அமைச்சர் கால் சுடுறதுக்கு முன்னாடியே பக்தர்கள் கால் சுடுறதை கவனிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். ஆனா, லோகேஷ் சொன்னதும் கூல் பெயின்ட் வரை வந்துருச்சே. லோகேஷ் வார்த்தையை கட்டளையா மதிச்சு, கமலி அதுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைப் பாரு... ''எழுபது வயசுக்கு மேல் இருக்குறவங்க மாவட்டச் செயலாளராக முடியாதுன்ற கட்டுப்பாடும், எலக்ஷன் மூலமா நிர்வாகிகளை தேர்வு செய்யுற விஷயமும் திருப்பூர் தி.மு.க.வுல கலக்கத்தை ஏற்படுத்தியிருக்காம்... ''மாவட்டச் செயலாளர் செல்வராஜ் 70 வயசு பார்டர்ல இருக்காரு. அவர் மீண்டும் மாவட்டச் செயலாளராக போட்டி போட முடியுமான்ற கேள்வி எழுந்தாலும், எலக்ஷன் வந்தா அவர் குரூப்தான் ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொல்றாங்க. அவர் யாரைக் கை காட்டுறாரோ, அவர்தான் போட்டியிடுவாருன்னும் பேச்சு ஓடுது... ''தினேஷ்குமார், தங்கராஜ் தரப்பு என்ன செய்யும், மாஜி அமைச்சர் சாமிநாதன், பத்மநாபன் தரப்பு என்ன ரோல் ப்ளே பண்ணும்னு கட்சிக்காரங்க கவனிச்சுட்டு இருக்காங்களாம்...'' மித்ரா புன்முறுவல் பூத்தாள். நகராட்சி தலைவர் வெளியிட்ட வீடியோ ''அக்கா... பொதுத் தேர்தலுக்கு நேரம் இருக்கலாம். ஆனா, கட்சிக்குள்ள டிரெய்லர் இப்பவே ஓடுது போல...'' அரசியல் கணக்கில் இருந்து பேச்சு காங்கயம் பக்கம் திரும்பியது. ''மித்து... காங்கயம் நகராட்சித் தலைவர் பாப்புக்கண்ணன் வெளியிட்ட வீடியோவும் இப்போ பேசுபொருளாயிருக்கு... ''போதிய பணியாளர்கள், கமிஷனர் இல்லாம நகராட்சிப் பணிகள் முடங்கியிருக்குன்னு அவர் குற்றஞ்சாட்டியிருக்காரு. இதுக்கு முன்னாடியும் தி.மு.க. ஆட்சிதானே இருந்துச்சு, அப்பவும் இப்படித்தானே இருந்துச்சுன்னு நெட்டிசன்கள் கேள்வி கேட்குறாங்க... ''இதுக்காகத்தாங்க ஆட்சியையே மாத்தி த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டோம். அப்பவும் மாற்றம் இல்லையேன்னு இன்னொரு தரப்பு பதில் சொல்றாங்க. திருப்பூர் குப்பை விவகாரத்துல முன்னாடி தி.மு.க.வை குற்றஞ்சாட்டினவங்க, இப்போ த.வெ.க. பக்கமும் கேள்வியைத் திருப்புறாங்களாம்...'' மித்ரா தலையசைத்தாள். ''அக்கா... ஆட்சி மாறலாம். குப்பை மட்டும் மாறாம இருந்தா, கேள்வியும் மாறாது...'' குப்பை பேச்சு வந்ததும், வசூல் புகாரும், பேனர் அகற்றுவதில் இருக்கும் சிக்கலும் நினைவுக்கு வந்தது. மார்க்கெட்டில் வசூல் வேட்டை ''அக்கா... திருப்பூர் காய்கறி மார்க்கெட்டுல போக்குவரத்தை சீரமைக்க வர்ற போலீசார், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், ஹோம் கார்டு பணியில இருக்குற சிலர், கடைக்குக் கடை 30, 50 ரூபாய்னு வாங்குறாங்களாம்னு வியாபாரிகள் புலம்புறாங்களாம்... ''கூட்டமே இல்லைன்னு சொன்னா, காயாவது நிறைச்சு கொடுங்கன்னு வாங்கிக்கிறாங்களாமாம். சுங்கம் கட்டிட்டு வந்து, இவங்களுக்கு வேற கப்பம் கட்ட வேண்டியிருக்குன்னு ஆதங்கப்படறாங்க...'' ''மித்து... மாநகராட்சி சிக்னல்கள் அருகே விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுற நெடுஞ்சாலை, போக்குவரத்துத்துறையினர், அவற்றை எடுத்துட்டு வர வாகனம் கேட்டா, மாநகராட்சில வாகனம் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்... ''அத்துமீறலுக்கு மாநகராட்சி அலுவலர்களே ஆதரவா இருக்குறதால உதவி செய்ய முடியாதுன்னும் சொல்றாங்களாம்... ''மித்து... பேனர் வைக்க இடம் கிடைக்குது. அதை எடுக்க வண்டிதான் கிடைக்க மாட்டேங்குது...'' ''அக்கா... மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல ஒன்பது கேள்விகள் கேட்கப்பட்டிருக்காம். ரைட்ஸ் திட்ட விசாரணை உள்பட பல கேள்விகளுக்கு, தகவல் இல்லை, வழங்க முடியாதுன்னு பதில் வந்திருக்காம்... ''இதுல ஹைலைட் என்னன்னா, ரைட்ஸ் திட்ட பணியாளர்கள் செய்த பணிகள் குறித்த விவரம் கேட்ட கேள்வியையே அப்படியே காப்பி-பேஸ்ட் பண்ணி பதிலா கொடுத்திருக்காங்களாம். இதனால மேல்முறையீடு செய்து, தகவல்களை வெளியே கொண்டுவர சமூக ஆர்வலர்கள் முடிவு செஞ்சிருக்காங்க...'' டிரான்ஸ்பர் பஞ்சாயத்து ''மித்து... மாவட்டத்திலும், மாநகர்லயும் மூணு வருஷத்துக்கு மேல ஒரே இடத்துல இருந்த போலீசாருக்கு டிரான்ஸ்பர் போட்டுட்டாங்க. ஆனா, சில ஏட்டு, எஸ்.ஐ.கள் மட்டும் உயர் அதிகாரிகள் பரிந்துரையால அதே இடத்துலயே இருக்காங்கன்னு புகார் எழுந்திருக்கு... ''இப்படி ஒரே இடத்துல நீண்ட நாள் இருப்பது கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டைக்கு துணைபுரியும்னு சொல்றாங்க. பாரபட்சமில்லாம எல்லாருக்கும் மாறுதல் நடத்தணும்னு எதிர்பார்ப்பும் இருக்காம்...'' ''அக்கா... தகவல் கேட்டா கிடைக்கல. மாறுதல் வந்தா எல்லாரும் மாறல...'' ''அப்புறம் அவிநாசி, கருவலுார், ராமநாதபுரம் பகுதிகள்ல ஆட்டுக்குட்டி, போர்வெல் கேபிள்னு வரிசையா திருட்டு போயிட்டு இருந்த நிலையில், முள்ளுக்காட்டுல சந்தேகமா ஒளிஞ்சிருந்த ரெண்டு பேரை ஊர்க்காரங்க பிடிச்சு போலீஸ்கிட்ட ஒப்படைச்சிருக்காங்க... ''கத்தரி கத்தி, சுருக்கு கம்பிகளையும் பறிமுதல் செஞ்சிருக்காங்க. போலீஸ்காரங்க அவங்களைப் பார்த்ததும், 'என்ன ரவி, மயில்சாமி... இங்கேயும் வந்துட்டீங்களா'ன்னு பேரு சொல்லி கூப்பிட்டதுல, ஊர்க்காரங்க ஷாக்காயிட்டாங்களாம்... ''விசாரணைல, அவங்க புளியம்பட்டியை சேர்ந்தவங்கன்னும், விவசாய நிலங்கள்ல கேபிள் திருடுறவங்கன்னும் தெரிய வந்திருக்கு. நாங்க ஆடு திருட வரலைங்க, மான்களை வேட்டையாடத்தான் வந்தோம்னு சொன்னவங்களை, அப்புறம் வனத்துறையினர்கிட்ட ஒப்படைச்சுட்டாங்களாம்...'' மித்ரா சற்று மூச்சுவிட்டாள். ''அக்கா... மங்கலம் ரோடு கருணைபாளையத்துல குப்பை பிரிக்குற இடத்துல, பணி முடிஞ்சதும் சில போலீசார் சீருடையோடயே மது அருந்துறாங்களாம்னு புகார் சொல்றாங்க...'' ஆதாரத்துடன் புகார் மக்கள் பகீர் ''மித்து... சமீபத்திய கிராமசபை கூட்டங்கள்ல குடிநீர், சுகாதாரப் பணிகள்ல பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருக்குன்னு பொதுமக்கள் ஆதாரத்தோட கேள்வி எழுப்பியிருக்காங்க... ''10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பணிக்கு ஒரு லட்சம் ரூபாய் கணக்கு, ரெண்டு குழாய் மாத்திட்டு நாலு குழாய் மாத்துனதா கணக்குன்னு புகார்கள் கிளம்பியிருக்காம். ஒரு போர்வெல்லுக்கே 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்குன்னும் சொல்றாங்க... ''ஜல் ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புகளுக்கும் 30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் நடந்திருக்குன்னு குற்றச்சாட்டு. கரைப்புதுார் ஊராட்சி பணியாளர் ஒருத்தரை சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க ஒட்டுமொத்த ஊராட்சி செயல்பாடுகள் தொடர்பாகவும் துறை ரீதியான விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்காம்...'' சித்ரா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். ''மித்து... எந்த பைலத் திறந்தா யாரோட கணக்கு வெளியே வரும்னு தெரியல. ஆனா, மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க... பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துதானே ஆகணும்...'' ''அக்கா... சரி, நாமும் கணக்கு கேட்டுட்டு வரலாம். ஆனா, நம்ம கணக்கு மட்டும் சரியா இருக்கணும்... இல்லன்னா, நம்மளே அடுத்த எபிசோடுக்கு மேட்டராயிடுவோம்...'' அறையே கலகலத்தது. --- ''மித்து... எந்த பைலத் திறந்தா யாரோட கணக்கு வெளியே வரும்னு தெரியல. ஆனா, மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க... பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துதானே ஆகணும்...'' ''அக்கா... சரி, நாமும் கணக்கு கேட்டுட்டு வரலாம். ஆனா, நம்ம கணக்கு மட்டும் சரியா இருக்கணும்... இல்லன்னா, நம்மளே அடுத்த எபிசோடுக்கு மேட்டராயிடுவோம்...''


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை