மேலும் செய்திகள்
யமஹா ஏராக்ஸ் 2025
14-May-2025
'டி.வி.எஸ்.,' நிறுவனம், அதன் 'ஜூப்பிடர் 125 டி.டி., எஸ்.எக்ஸ்.சி.,' என்ற நடு ரக மாடல் ஸ்கூட்டரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், புதிய டூயல் டோன் நிறங்களில் வந்துள்ளது. எல்.சி.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.இதில், ஏற்கனவே உள்ள 124 சி.சி., சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. முன்புற டெலிஸ்கோப்பிக் மற்றும் பின்புற டூயல் ஷாக் அப்சார்பர்கள், முன்புற டிஸ்க் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகள், 12 அங்குல அலாய் சக்கரங்கள், யு.எஸ்.பி., சார்ஜிங் போர்ட், முன்புற சேமிப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.இதில், 33 லிட்டர் பூட் ஸ்பேஸ், 108 கிலோ எடை, 163 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் 765 எம்.எம்., சீட் உயரம் உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு, 'ஹோண்டா ஆக்டிவா 125', 'சுசூகி ஆக்சிஸ் 125', 'ஹீரோ டெஸ்டினி 125', 'யமஹா பேசினோ' ஆகிய ஸ்கூட்டர்கள் போட்டியாக உள்ளன.
இன்ஜின் - 124 சி.சி., சிங்கிள் சிலிண்டர், பெட்ரோல் பவர் - 8.04 ஹெச்.பி., டார்க் - 10.5 என்.எம்., பூட் ஸ்பேஸ் - 33 லிட்டர் மைலேஜ் - 57.27 கி.மீ., பெட்ரோல் டேங்க் - 5.1 லிட்டர்டீலர்: SBM TVS - 95000 15399
14-May-2025