உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / மீண்டும் கியா கார்னிவெல் இறக்குமதியால் விலை இருமடங்கு

மீண்டும் கியா கார்னிவெல் இறக்குமதியால் விலை இருமடங்கு

'கியா' நிறுவனம், அதன் நான்காம் தலைமுறை 'கார்னிவெல்' எம்.பி.வி., காரை புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை, பழைய காரை விட 30 லட்சம் ரூபாய் அதிகம். இந்த கார், 7 சீட்டர் வகையில் மட்டுமே வருகிறது.டைகர் நோஸ் கிரில், எல் வடிவ எல்.இ.டி., டி.ஆர்.எல்., லைட்டுகள், பவர்டு 'ஸ்லைடிங்' பின் புற கதவுகள், கனெக்டட் டெயில் லைட்டுகள், புதிய 18 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை அதன் வெளிப்புற மாற்றங்கள். இந்த கார், பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பில் வருகிறது. டூயல் டிஸ்ப்ளே, ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் சீட்டுகள், முன்வரிசை மற்றும் இரண்டாம் வரிசைவென்டிலேட்டட் சீட்டுகள், அடாஸ் பாதுகாப்பு, 8 காற்று பைகள், டூயல் சன் ரூப் ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த கார், இந்தியாவில் இறக்குமதி ஆகிறது. படிப்படியாக உள் நாட்டில் தயாரிக்கப்பட்டு, விலை குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.விலை ரூ.63.90 லட்சம்

விபரக்குறிப்பு

இன்ஜின் 2.2 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் பவர் 190 ஹெச்.பி., டார்க் 440 என்.எம்., மைலேஜ் 13.9 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை