அப்பாச்சி ஆர்.ஆர்., 200 மினி ஜிபி சிறுவர்களுக்கான டி.வி.எஸ்., ரேஸ் பைக்
'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், 'அப்பாச்சி ஆர்.ஆர்., 200 மினி ஜிபி' என்ற சிறுவர்களுக்கான ரேஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 15 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பைக் ரேஸில் பங்கேற்க முடியும். எனவே, சிறு வயதில் இருந்தே பைக் ரேஸ் தொடர்பான அனுபவத்தை வழங்க, 'டி.வி.எஸ்., அப்பாச்சி சிறுவர்கள்' திட்டத்தை இந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாக, 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, பைக் ரேஸ் தொடர்பான ஆரம்ப பயிற்சியை இந்நிறுவன வழங்குகிறது.