உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / பஜாஜ் சேத்தக் இ.வி., நவீன கட்டமைப்பு, அதிக ரேஞ்ச்

பஜாஜ் சேத்தக் இ.வி., நவீன கட்டமைப்பு, அதிக ரேஞ்ச்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் சேத்தக் ஸ்கூட்டரை மேம்படுத்தி, அடுத்த தலைமுறையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டரில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும், அதே மூன்று வகையில் வந்துள்ளது.இதன் சேசிஸ் மறுசீரமைக்கப்பட்டுள்ளதால், வீல் பேஸ் 25 எம்.எம்., சீட் நீளம் 80 எம்.எம்., மற்றும் பூட் ஸ்பேஸ் 17 லிட்டர் அதிகரித்துள்ளது. சீட் அடியில் அமைக்கப்பட்டு இருந்த பேட்டரி, தற்போது, ப்ளோர் போர்டில் மாற்றப்பட்டுள்ளது. இது, குறைவான ஈர்ப்பு விசையை வழங்குவதால், ஸ்கூட்டரின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.இதன் 3.5 கி.வாட்.ஹார்., பேட்டரி, 153 கி.மீ., ரேஞ்சை வழங்குகிறது. டாப் ஸ்பீடு, 73 கி.மீ.,ராக உள்ளது. அம்சங்களை பொறுத்தவரை, டி.எப்.டி., டிஸ்ப்ளே, நேவிகேஷன், ப்ளூடூத் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிகள் ஆகியவை உள்ளன.இந்த ஸ்கூட்டருக்கு, 3 ஆண்டு அல்லது 50,000 கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. டி.வி.எஸ்., ஐ - க்யூப், ஏத்தர் ரிஸ்டா, ஆம்பியர் நெக்சஸ் மற்றும் ஓலா எஸ் - 1 ஸ்கூட்டர்கள் இதற்கு போட்டியாக உள்ளன.

விலை - ரூ. 1.20 - 1.27 லட்சம்

விபரக்குறிப்பு

பேட்டரி 3.5 கி.வாட்.ஹார்.,மோட்டார் பவர் 5.6 ஹெச்.பி.,டார்க் 16 என்.எம்.,ரேஞ்ச் 153 கி.மீ.,டாப் ஸ்பீடு - 73 கி.மீ.,பூட் ஸ்பேஸ் 34 லிட்டர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 25, 2024 10:35

வண்டி நிறுத்த பார்க்கிங் வசதி இருக்கான்னு பார்த்து குடுங்க. கண்டவனுக்கு வண்டி வித்து கண்ட எடத்தில் நிறுத்திட்டு போயிடறாங்க.


சமீபத்திய செய்தி