உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / பென்ஸ் இ.க்யூ.பி., மின்சார எஸ்.யூ.வி., 112 கி.மீ., கூடுதல் ரேஞ்ச்

பென்ஸ் இ.க்யூ.பி., மின்சார எஸ்.யூ.வி., 112 கி.மீ., கூடுதல் ரேஞ்ச்

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் 'இ.க்யூ.பி.,' மின்சார எஸ்.யூ.வி.,யை புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. ஏழு சீட்டர் வகையில் மட்டுமே இருந்த இந்த கார், தற்போது ஐந்து சீட்டராகவும் வந்துள்ளது.பென்ஸ் மின்சார கார்களுக்கான பிரத்யேக கிரில், சீரமைக்கப்பட்ட பம்பர்கள், முன்புற எல்.இ.டி., லைட் பார், 19 அங்குல ஏ.எம்.ஜி., ஸ்போர்ட்ஸ் அலாய் சக்கரங்கள் ஆகியவை காரின் ஆடம்பரத்தை பிரதிபலிக்கின்றன. இந்த காரில், பழைய 66.5 கி.வாட்.ஹார்., பேட்டரிக்கு பதிலாக, புதிய 70.5 கி.வாட்.ஹார்., பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 423 கி.மீ.,ராக இருந்த ரேஞ்ச், 535 கி.மீ.,ராக உயர்ந்துள்ளது. புதிய 5 சீட்டர் காரின் செயல்திறன், 7 சீட்டர் கரை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.விலை : 5 சீட்டர் - ரூ.77.50 லட்சம்7 சீட்டர் - ரூ.70.90 லட்சம்டீலர்: சுந்தரம் மோட்டார்ஸ் பென்ஸ் - 9384058651

விபரக் குறிப்பு

பேட்டரி 70.5 கி.வாட்.,ஹார்.,மோட்டார் பவர் 292 எச்.பி.,டார்க் 520 என்.எம்.,ரேஞ்ச் 447 கி.மீ.,டாப் ஸ்பீடு 160 கி.மீ.,பிக் அப்: (0 - 100 கி.மீ.,) 6.2 வினாடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ