உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / பென்ஸ் இ.க்யூ.எஸ்-., -580 ஒரே சார்ஜ், 809 கி.மீ., ரேஞ்ச்

பென்ஸ் இ.க்யூ.எஸ்-., -580 ஒரே சார்ஜ், 809 கி.மீ., ரேஞ்ச்

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் புதிய 'இ.க்யூ.எஸ்., 580' என்ற மின்சார எஸ்.யூ.வி., காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் இரண்டாவது பென்ஸ் மின்சார கார் ஆகும். இந்த காரில், 7 பேர் வரை பயணிக்க முடியும்.இந்தியாவில் எந்த காரும் தராத அளவிற்கு, ஒரு சார்ஜில் 809 கி.மீ., துாரம் பயணிக்க முடியும். இந்த காரில், மிக கனமான 122 கி.வாட்.ஹார்., பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரியை, 200 கி.வாட்., பாஸ்ட் சார்ஜர்கள் வரை சார்ஜ் செய்ய முடியும். இதை 80 சதவீதம் சார்ஜ் செய்ய, 30 நிமிடங்கள் ஆகும். இ.க்யூ.எஸ்., செடான் காரை போல இதன் டிசைன் இருந்தாலும், 21 அங்குல ஏ.எம்.ஜி., அலாய் சக்கரங்கள், பின்புற டிசைன் உள்ளிட்டவை எஸ்.யூ.வி., என்பதை பிரதிபலிக்கிறது.ஐந்து மீட்டர் கார் என்பதால் சொகுசான இடவசதி, மிதக்க வைக்கும் ஏர் சஸ்பென்ஷன்கள், மூன்று டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஆடம்பர டேஷ்போர்டு, 17.7 அங்குல ஹைப்பர் டிஸ்ப்ளே, 15 ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், இரண்டாம் வரிசை பயணிகளுக்கு இரு டிஸ்ப்ளேக்கள், ஒரு சாம்சங் டேப்லெட் மற்றும் இரு ஹெட்போன்கள், 880 லிட்டர் பூட் பகுதி, அடாஸ் லெவல் 2 பாதுகாப்பு என பல அம்சங்கள் இதில் உள்ளன.

விபரக்குறிப்பு

பேட்டரி 122 கி.வாட்.ஹார்.,மோட்டார் பவர் 536 ஹெச்.பி.,டார்க் 858 என்.எம்.,ரேஞ்ச் 809 கி.மீ.,பிக்கப் 0 - 100 கி.மீ., 3.2 வினாடி

விலை

ரூ. 1.41 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ