பாரத்பென்ஸ் 917 49 சீட் உள்ள 8 மீட்டர் நீள பஸ்
'டைம்லர்' நிறுவனம், 'பாரத்பென்ஸ் 917' என்ற 8 மீட்டர் பஸ்சை அறிமுகம் செய்துள்ளது. இது, பள்ளி, கல்லூரி, சுற்றுலா, நிறுவன பணியாளர் போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு மீட்டர் நீளம் உள்ள இந்த பஸ், 26, 35, 39, 49 சீட்களில் வந்துள்ளது. இதில், 4.0 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் இன்ஜின் கிடைக்கிறது. இந்த இன்ஜின், 6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சின் மொத்த எடை, 9,600 கிலோவாக உள்ளது. பவர் ஸ்டீயரிங், 17.5 அங்குல டியூப்லெஸ் டயர்கள், ஏ.பி.எஸ்., உடன் ஏர் டிரம் பிரேக் வசதி, பஸ் கவிழாமல் இருக்க ரோலோவர் ஸ்டெபிலிட்டி வசதி, புட் ஸ்டெப்புடன் வசதியான சீட்கள், ஒவ்வொரு பயணிக்கும் சீட் பெல்ட், பெரிய எமர்ஜென்சி எக்சிட், ஏசி கேபின், நெருப்பு எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அமைப்பு, காற்று சுத்திகரிப்பு வசதி, 43 லிட்டர் வெளியேற்ற திரவம் டேங்க் என பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. எதிர்பார்ப்பு விலை: ரூ. 36 - ரூ. 38 லட்சம் இன்ஜின் - 4.0 லிட்டர், டீசல் பவர் - 170 ஹெச்.பி., டார்க் - 520 என்.எம்., டேங்க் - 171 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 192 எம்.எம்., எடை - 9,600 கிலோ