உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / பாரத்பென்ஸ் டார்க் ஷிப்ட் ஆட்டோ கியர்பாக்ஸில் வரும் முதல் டிப்பர்

பாரத்பென்ஸ் டார்க் ஷிப்ட் ஆட்டோ கியர்பாக்ஸில் வரும் முதல் டிப்பர்

'டைம்லர்' நிறுவனம், அதன் பாரத்பென்ஸ் 'ஹெச்.எக்ஸ்.,' மற்றும் 'டார்க் ஷிப்ட்' என இரு டிப்பர்களை அறிமுகம் செய்துள்ளது. கட்டுமான பணிகளுக்கு 'ஹெச்.எக்ஸ்.,' மாடலும், சுரங்க பணிகளுக்கு 'டார்க் ஷிப்ட்' மாடலும் பயன்படுகின்றன. இரு மாடல்களும், '28 மற்றும் 35 டன்' என இரு எடை பிரிவுகளில் வருகின்றன.இந்த டிப்பரில், 7.2 லிட்டர், 6 சிலிண்டர், பி.எஸ்., - 6, டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. எடையை பொறுத்து, இன்ஜின் பவர் மற்றும் டார்க் மாறுபடுகின்றன. டீசல் டேங்க், 260 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த இன்ஜினோடு, 9 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. சுரங்க டிப்பருக்கு மட்டும், கார்களில் வரும் 12 ஸ்பீடு, 'ஏ.எம்.டி.,' ஆட்டோ கியர்பாக்ஸ் முதல் முறையாக வழங்கப்படுகிறது. இது, சுரங்க பகுதிகளில், ஓட்டுநரின் வேலையை எளிதாக்குகிறது.முன்புற ஆக்சிலில், யூனிடைஸ்டு பியரிங் என்ற பிரத்யேக பியரிங் வழங்கப்படுகிறது. இது, கரடுமுரடான பகுதிகளில், நிலையான பயணத்திற்கு உதவுவது மட்டுமின்றி, வாகன பராமரிப்பையும் எளிதாக்குகிறது. பலப்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன்கள் மற்றும் ஆக்சில், ஏ.பி.எஸ்., வசதி, ஹில் ஹோல்டு வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டிரைவர் கண்காணிப்பு அமைப்பு, இன்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

https://x.com/dinamalarweb/status/1942784400191807936


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை