பி.எம்.டபுள்யு., எம் - 5, வி - 8 ஹைபிரிட் இன்ஜின், 3.5 வினாடியில் பிக்கப்
'பி.எம்.டபுள்யு.,' நிறுவனம், அதன் 'எம் - 5' அதிவேக செடான் காரை புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, விலை 37 லட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இம்முறை இதில், வலுவான 'பிளக் இன் ஹைபிரிட்' இன்ஜின் வழங்கப்பட்டுள்ளதால், 5 - சீரிஸ் கார்களில் அதிவேக காராக மாறி உள்ளது. இதனால், எடை 500 கிலோ உயர்ந்து, காரின் மொத்த எடை 2.5 டனாக உள்ளது. 'எக்ஸ் டிரைவ்' என்ற ஆல் வில் டிரைவுடன் வரும் இந்த காரில், 4.4 லிட்டர், டுவின் டர்போ, வி - 8 இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள 18.6 கி.வாட்.ஹார்., பேட்டரி மூலம், 69 கி.மீ., வரை பயணிக்க முடியும். அதுவும், 100 கி.மீ., வேகத்தை, இது வெறும் 3.5 வினாடிகளில் எட்டிப்பிடிக்கிறது.இந்த கார், 8 - ஸ்பீடு ஆட்டோ கியர் பாக்ஸில் இயங்குகிறது. கூடுதலாக, அடாப்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் ரியர் வீல் ஸ்டியரிங் ஆகியவை அடிப்படை அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. வெளிப்புற டிசைன், ஆக்ரோஷமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில், பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.போட்டியாளரான, 'மெர்சிடிஸ் - ஏ.எம்.ஜி., சி - 63' செடான் காரை விட, இதன் விலை வெறும் 4 லட்ச ரூபாய் மட்டுமே அதிகம்.
விலை: ரூ.1.99 கோடி
விபரக்குறிப்பு
இன்ஜின் 4.4 லிட்டர், டுவின் டர்போ, வி - 8 பெட்ரோல்பவர் - 717 ஹெச்.பி.,டார்க் 1000 என்.எம்.,(0 - 100 கி.மீ.,) பிக்கப் 3.5 வினாடிடாப் ஸ்பீட் -250 கி.மீ.,