உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / பொலேரோ நியோ 2025

பொலேரோ நியோ 2025

'மஹிந்திரா' நிறுவனம், 'பொலேரோ நியோ' என்ற எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. நான்கு மீட்டர் நீளம் உள்ள இந்த காரில், ஏழு பேர் வரை பயணிக்கலாம். 'என் - 11' என்ற உயர்ந்த விலை மாடல் அறிமுகமாகி உள்ளது. இந்த கார், ஸ்டாண்டர்ட் மாடல் பொலேரோ காரை விட, அதிக ஆற்றல், கூடுதல் அம்சங்கள் மற்றும் தற்கால டிசைனில் வந்துள்ளது. இதில், 100 ஹெச்.பி., பவரை வெளிப்படுத்தும், 1.5 லிட்டர், 3 - சிலிண்டர், எம் - ஹாக் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின், 5 - ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸில் இணைக்கப் பட்டுள்ளது. ஓட்டுநர் அனுபவம் மற்றும் காரின் கட்டுப்பாட்டை மேம்படுத்த, சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் அமைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 9 அங்குல டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பின்புற கேமரா, யூ.எஸ்.பி., சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை புதிதாக வழங்கப் படுகின்றன. விலை ரூ.8.49 முதல் ரூ.9.99 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி