உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / வாடிக்கையாளருக்கு கேட்டர்பில்லர் உத்தரவாதம்

வாடிக்கையாளருக்கு கேட்டர்பில்லர் உத்தரவாதம்

'கேட்டர்பில்லர்' நிறுவனம், 11க்கும் அதிகமான இயந்திரங்களை கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. ஹைட்ராலிக் எக்ஸ்கவேட்டர், மோட்டார் கிரேடர், ஸ்கிட் ஸ்டீயர் லோடர், புல்டோசர் மற்றும் வீல் லோடர் ஆகியவை இடம் பெற்றிருந்தன.இந்நிறுவன துணை நிறுவனங்களான 'எப்.ஜி., வில்சன், பெர்கின்ஸ், சோலார் டர்பைன்' ஆகியவை இன்ஜின், ஜெனரேட்டர், கேஸ் டர்பைன் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தின.இந்த கண்காட்சியில், வாடிக்கையாளர்களுக்கு பராமரிப்பு சேவை திட்டத்தை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதில், குறிப்பிட்ட காலத்திற்குள் இயந்திர பராமரிப்பு மற்றும் உதிரிபாக பரிமாற்றம் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.புதிதாக 'கேட் சென்ட்ரல்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தேவையான இயந்திர உதிரிபாகங்களை இணையம் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம்.அமெரிக்காவில், சிறிய டிராக்டர் நிறுவனமாக இருந்த கேட்டர்பில்லர் நிறுவனம், தற்போது, கட்டுமான இயந்திரங்கள் துறையில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்தியாவில், இது 1971 முதல் இயங்கி வருகிறது. இதன் உற்பத்தி ஆலைகள், திருவள்ளூர், ஒசூர் மற்றும் சென்னையின் மஹிந்திரா சிட்டியில் அமைந்துள்ளன. உள்நாட்டில், 7,300 கேட்டர்பில்லர் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுதும் 224 விற்பனை மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு மையங்களை அமைத்துள்ளது இந்நிறுவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 18, 2024 19:37

அமெரிக்கா கம்பெனிக் காரன் சொன்பபடி செய்வான். இந்திய கம்பெனிகளும், வங்கிகளும் படு திராபை. அதிலும் IEPF போன்ற அரசு நிறுவனங்கள் படு திராபை.


புதிய வீடியோ