கிளாசிக் 650 டுவின் செம வெயிட்டு, நம்ம என்பீல்டு பைக்கு
'ராயல் என்பீல்டு' நிறுவனம், அதன் 'கிளாசிக் 650' டூரர் பைக்கை காட்சிப்படுத்தி உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் என்பீல்டு பைக்கான கிளாசிக் தற்போது, 650 சி.சி., பிரிவில் வந்துள்ளது.இது, என்பீல்டு பைக்குகளில் அதிக எடை கொண்ட பைக்காகும். 'ஷாட்கன் 650' பைக்கை விட 3 கிலோ எடை அதிகமாக, 243 கிலோவில் வந்துள்ளது. இந்த பைக்கின் சேசிஸ், பிரேக், சஸ்பென்ஷன் மற்றும் ஸ்விங் ஆர்ம் ஆகிய அனைத்தும் ஷாட்கன் பைக்கில் உள்ளவை. இதில், 19 மற்றும் 18 அங்குல ஸ்போக் சக்கரங்கள், புதிய எம்.ஆர்.எப்., டயர்கள், செமி அனலாக் டிஸ்ப்ளே, 14.8 லிட்டர் பெட்ரோல் டேங்க், 800 எம்.எம்., சீட் உயரம், 154 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை இந்த பைக்கை தனித்துவப் படுத்துகிறது. இது, ஜனவரி மாதம் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
விலை: ரூ.3.60 - 3.80 லட்சம் (எதிர்பார்ப்பு)
விபரக்குறிப்பு
இன்ஜின் 647.95 சி.சி., டுவின் சிலிண்டர், ஏர் கூல்டுபவர் 47.6 ஹெச்.பி., டார்க் 52.3 என்.எம்.,எடை 243 கிலோ