ஹோண்டா அமேஸ் ரூ. 10லட்சத்தில், அடாஸ் பாதுகாப்பு
'ஹோண்டா கார்ஸ்' நிறுவனம், மூன்றாம் தலைமுறை 'அமேஸ்' செடான் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் முன்பதிவு மற்றும் டெஸ்ட் டிரைவ் தொடங்கி உள்ள நிலையில், இதன் வினியோகம் இந்த மாதம் முதல் ஆரம்பமாகிறது. முன்புற மற்றும் உட்புற கேபின் டிசைன் எலிவேட் காரை போன்றும், பின்புற டிசைன் 'சிட்டி' காரை போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரியர் ஏ.சி., வெண்ட்டுகள், 8 அங்குல டச் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, 15 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை புதிதாக வழங்கப்பட்டுள்ளன.காரின் அகலம் 35 எம்.எம்., மற்றும் உயரம் 2 எம்.எம்., உயர்த்தப்பட்டுள்ளதால், உட்புற இடம் அதிகரித்து, பூட் ஸ்பேஸ் 416 லிட்டராக உள்ளது. சன் ரூப் மட்டும் இதில் வழங்கப்படவில்லை.ஆறு பாதுகாப்பு பைகள் அடிப்படை அம்சமாக வழங்கப்பட்டாலும், அடாஸ் பாதுகாப்பு கொண்ட குறைந்த விலை காராக இது விளங்குகிறது. இன்ஜின், கியர் பாக்ஸில் எந்த மாற்றமும் இல்லை. இந்த காருக்கு, அண்மையில் அறிமுகமான மாருதி டிசையர், டாடா டியாகோ மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய கார்கள் போட்டியாக உள்ளன.
விபரக்குறிப்பு
இன்ஜின் 1.2 லிட்டர், 4 சிலிண்டர், பெட்ரோல்பவர் 90 ஹெச்.பி.,டார்க் 110 என்.எம்.,மைலேஜ் 19 கி.மீ.,பூட் ஸ்பேஸ் 416 லிட்டர்