உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஹோண்டா எலிவேட் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார்

ஹோண்டா எலிவேட் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார்

இந்தியாவில் உற்பத்தியான 'ஹோண்டா எலிவேட்' எஸ்.யூ.வி., கார், 'ஜே.என்.கேப்' என்ற 'ஜப்பான் கிராஷ் டெஸ்ட்டில்', 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது. இந்த கார், இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் முதல் ஹோண்டா கார் ஆகும்.ஜப்பானில், 'டபிள்யூ.ஆர்., - வி.,' என்ற பெயரில், இது விற்பனையாகி வருகிறது. இந்த கிராஷ் டெஸ்டில், 100க்கு 90 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. அதாவது, 193.8 புள்ளிகளுக்கு, 176.23 புள்ளிகளை பெற்றுள்ளது. விபத்து ஏற்படாமல் பாதுகாப்பதில், 85.8க்கு, 82.22 புள்ளிகளும், விபத்து ஏற்பட்டால் பாதிப்பை குறைப்பதில், 100க்கு 86 புள்ளிகளும் பெற்றுள்ளது.இந்த கார், ராஜஸ்தான் மாநிலம் தப்புக்கரா பகுதியில் அமைந்துள்ள ஹோண்டா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. என்னதான் ஜப்பானில், 5 ஸ்டார் களை பெற்று இருந்தாலும், இந்தியாவின் பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில் இந்த கார் இன்னும் சோதனை செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ