உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஐ -10 நியாஸ் சி.என்.ஜி., ஹூண்டாயின் டூயல் சிலிண்டர் செட் அப்

ஐ -10 நியாஸ் சி.என்.ஜி., ஹூண்டாயின் டூயல் சிலிண்டர் செட் அப்

'ஹூண்டாய் மோட்டார்' நிறுவனம், எக்ஸ்டர் டூயல் சிலிண்டர் சி.என்.ஜி., காரை தொடர்ந்து, 'ஐ-10 நியாஸ் டூயல் சிலிண்டர்' ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரு வகையில் வருகிறது.ஐ - 10 நியாஸ் சிங்கிள் சிலிண்டர் சி.என்.ஜி., காரை ஒப்பிடுகையில், டூயல் சிலிண்டர் காரின் விலை 7,000 ரூபாய் அதிகம். பெட்ரோல் காரைஒப்பிடுகையில், 97,000 ரூபாய் அதிகம்.இதன் போட்டியாளரான,டாடா டியாகோ டூயல் சிலிண்டர் சி.என்.ஜி., காரை விட, இந்த காரின் விலை 1.15 லட்சம் ரூபாய் அதிகம்.இந்த கார் மேனுவல் கியர் பாக்ஸ் வகையில் மட்டுமேவருகிறது.ஆனால், டாடா டியாகோ சி.என்.ஜி., கார், மேனுவல் மற்றும் ஏ.எம்.டி., ஆட்டோ கியர் பாக்ஸ் ஆகிய இரு வகையிலும் வருகிறது.மாருதி வேகன் ஆர் சி.என்.ஜி., கார் இதன் மற்றொரு போட்டியாளராகும்.விலை ரூ. 7.75 லட்சம் - ரூ. 8.30 லட்சம்டீலர்: Kun Hyundai - 98400 63170

விபரக்குறிப்பு

இன்ஜின் - 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல்ஹார்ஸ் பவர் - 69 எச்.பி.,டார்க் - 95 என்.எம்.,மைலேஜ் - 27 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி