கே.டி.எம்., 390 டியூக்ல் க்ரூஸ் கன்ட்ரோல்
'கே.டி.எம்.,' நிறுவனம், அதன் '390 டியூக்' பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. டிசைன், இன்ஜின் மற்றும் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை. அட்வெஞ்சர் 390 பைக்கில் இருக்கும், க்ரூஸ் கன்ட்ரோல் அமைப்பு, இந்த பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. இது, 'டூரிங்' செல்பவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கூடுதலாக, புதிய கருப்பு நிறத்திலும் இது வந்துள்ளது. அண்மையில் செய்யப்பட்ட விலை குறைப்பு நடவடிக்கைக்கு பிறகு, தற்போது எந்த விலை மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பைக்கின் விலை, 2.95 லட்சம் ரூபாயாக உள்ளது. 'யமஹா எம் - 03', 'அப்ரில்லியா டுவானோ 457' ஆகிய ஸ்ட்ரீட் பைட்டர் பைக்குகளுக்கு கடும் போட்டியாக உள்ளது.