மகேந்திரா, 70 லட்சம் டிராக்டர்கள் உற்பத்தி
'மஹிந்திரா பார்ம் எக்யுப்மென்ட் வணிக' நி றுவனம், 70 லட்சம் டிராக்டர்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் கீழ், மஹிந்திரா, ஸ்வராஜ், க்ரோமேக்ஸ் டிராக்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உலகளவில் அதிக டிராக்டர்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம், 350க்கும் அதிகமான டிராக்டர் மாடல்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் மும்பை, நாக்பூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் உள்ளன. சென்னையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உள்ளது. கடந்த நி தியாண்டில், 5.26 லட்சம் டிராக்டர்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏழு புதி ய டிராக்டர்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது.