மாருதி பிரெசா எஸ்-.யூ.வி., டர்போ பெட்ரோல், 5 ஸ்டார் ரேட்டிங்
'மாருதி சுசூகி' நிறுவனம், 'பிரெசா' சப் காம்பேக்ட் எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இதில், இயந்திர மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கார், என்.ஏ., டர்போ மைல்டு ஹைபிரிட் பெட்ரோல், சி.என்.ஜி., ஆகிய மூன்று மாடல்களில் வருகிறது. இது, 'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்டில், 5 ஸ்டார் பெற்ற ஐந்தாவது மாருதி கார் ஆகும். ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர், 4 சிலிண்டர் என்.ஏ., ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் நீடிக்கிறது. முதல் முறையாக, 'பிரான்க்ஸ்' காரில் வரும், 1.0 லிட்டர், 3 - சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் மேம்படுத்தப்பட்டு, இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் இன்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் எ.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்கள் கிடைக்கின்றன.