உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி /  மாருதி இ85 வேகன் ஆர் பெட்ரோல் காரை விட ரூ. 86,000 அதிகம்

 மாருதி இ85 வேகன் ஆர் பெட்ரோல் காரை விட ரூ. 86,000 அதிகம்

'மா ருதி சுசூகி' நிறுவனம், 'இ85' எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் 'வேகன் ஆர்' காரை அறிமுகம் செய்துள்ளது. 'இசட்.எக்ஸ்.ஐ.,' பெட்ரோல் மாடல் காரை அடிப்படையாக கொண்டு வரும் இந்த காரின் விலை, 86,000 ரூபாய் அதிகம். இந்த காரில், 'கே.12.என்.,' 1.2 லிட்டர், 4 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் கிடைக்கிறது. இந்த இன்ஜினின் உதிரிபாகங்கள், 20 முதல் 85 சதவீத வரை உள்ள எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த இன்ஜினுடன் 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் மாற்றம் இல்லை என்றாலும், இ85 கார் என்பதை சுட்டிக்காட்ட பிரத்யேக அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. டூயல் டோன் கேபின், 3 - ஸ் போக் ஸ்டீயரிங், 7 அங்குல டச் ஸ்கிரீன், 6 காற்று பைகள், பின்புற ஏ.சி ., வென்ட், 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பின்புற சென்சார் மற்றும் வைபர், கார் இணைப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங் கள் இடம் பெற்றுள்ளன. விலை - ரூ. 7.24 லட்சம் இன்ஜின் - 1.2 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் பவர் - 90.9 ஹெச்.பி., டார்க் - 114 என்.எம்., டேங்க் - 32 லிட்டர் பூட் ஸ்பேஸ் - 341 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 165 எம்.எம்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை