மாருதி சுசூகி விக்டோரிஸ் எஸ்.யூ.வி., அடாஸ் லெவல் - 2, ஆல் வீல் டிரைவ், 5 - ஸ்டார்
'மாருதி சுசூகி' நிறுவனம், 'விக்டோரிஸ்' என்ற புதிய எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு உள்ள முதல் மாருதி கார் ஆகும். பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில், 5 - ஸ்டார் பெற்றுள்ளது. 'விட்டாரா' எஸ்.யூ.வி.,யில் வரும் 1.5 லிட்டர், மைல்டு ஹைபிரிட், ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் சி.என்.ஜி., என மூன்று மாடல்களில் இன்ஜின் வருகிறது. பூட் ஸ்பேஸ் குறையாமல் இருக்க, காருக்கு அடியில் இரு சி.என்.ஜி., டேங்குகள் வழங்கப்படுகின்றன. 5 - ஸ்பீடு மேனுவல், 6 - ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் மற்றும் இ - சி.வி.டி., ஆட்டோ கியர் பாக்ஸ்களில் வரும் இந்த கார், பிரண்ட் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்புகளிலும் கிடைக்கின்றன.