உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / நெக்ஸான் சி.என்.ஜி., இந்தியாவின் முதல் டர்போ சி.என்.ஜி.,

நெக்ஸான் சி.என்.ஜி., இந்தியாவின் முதல் டர்போ சி.என்.ஜி.,

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'நெக்ஸான் சி.என்.ஜி.,' காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக டர்போ சி.என்.ஜி., இன்ஜினில் இந்த கார் வந்துள்ளது. இதன் விலை பெட்ரோல் காரை விட ஒரு லட்சம் ரூபாய் அதிகம்.இதில், டாடாவின் விசேஷ டூயல் சி.என்.ஜி., டேங்க் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பூட் ஸ்பேஸ் 321 லிட்டராக உள்ளது. இது பெட்ரோல் காரை விட, 61 லிட்டர் மட்டுமே குறைவு.இந்த காரில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காரின் பவர் 20 ஹெச்.பி., உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சி.என்.ஜி.,க்கு 24 கி.மீ., மைலேஜ் தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது. ஆனால், மேனுவல் கியர் பாக்ஸில் மட்டுமே இந்த கார் வருகிறது. இந்த காருக்கு, மாருதி ப்ரான்க்ஸ் மற்றும் பிரெசா சி.என்.ஜி., கார்களும், டொயோட்டா டைசர் சி.என்.ஜி., காரும் போட்டியாக உள்ளன.

டீலர்

: Tafe Access Tata Motors - 74016 99805

விபரக்குறிப்பு

இன்ஜின்: 1.2 லிட்டர், டர்போ பெட்ரோல்பவர்: 99 ஹெச்.பி.,டார்க்: 170 என்.எம்.,மைலேஜ்: 24 கி.மீ.,பூட் ஸ்பேஸ் 321 லிட்டர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ