ஒமேகா செய்கி வெக்ஸ்ட்ரா ஒரு லட்சம் ரூபாய்க்குள் புதிய இ.வி., ஸ்கூட்டர்
'ஒமேகா செய்கி மொபிலிட்டி' நிறுவனம், 'வெக்ஸ்ட்ரா' என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி, மின்சார இருசக்கர வாகன சந்தையில் நுழைந்துள்ளது. மொத்த எடை 110 கிலோவில் இருக்கும் இந்த ஸ்கூட்டரில், 3.45 கி.வாட்.ஹார்., எல்.எப்.பி., பேட்டரி வந்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 110 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம். டாப் ஸ்பீடு, 70 கி.மீ.,ராக உள்ளது. இதில், 'ஐ.பி., 67' வாட்டர் ப்ரூப் பேட்டரி மற்றும் ஹப் மோட்டார் வழங்கப்படுகிறது. பேட்டரியை வீட்டு சார்ஜரில் முழு சார்ஜ் செய்ய, 5 மணி நேரம் எடுக்கிறது.