மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
போக்ஸ்வேகன் பீட்டெல் என்பது, ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடலாகும். இதன் வடிவமைப்பு காரணமாக, 'பீட்டெல்' என்றழைக்கப்படுகிறது. பக்' என்றும் அழைக்கின்றனர்.இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், 1941 முதல் 1944 வரை, ஹிட்லருக்காக இந்த பிரத்யேக கார் தயாரிக்கப்பட்டது.போக்ஸ்வேகன் நிறுவனம், பீட்டெல் கார் தயாரிப்பை நிறுத்திவிட்டது. தற்போது இந்த காரை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டியிலுள்ள, 'விவாஹா திலக் ஷி டெக்கர்' நிர்வாகி ஷாலுவும் அதில் ஒருவர்.''இதன் மதிப்பை நாம் நிர்ணயிக்கவே முடியாது எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம். இதில் பயணிக்கும் ஒவ்வொரு நாளும், நமக்கு புதிய உற்சாகம் பிறக்கும். ஒருசிலர் மட்டுமே இந்த காரை வைத்து பராமரித்து வருகின்றனர். அதில் நானும் ஒருத்தி என்பதில் பெருமைப்படுகிறேன்,''''அதெல்லாம் சரி... காரை பற்றி சொல்லுங்கள்,''3 லிட்டர் இன்ஜின், நல்ல பவர், அதிக சொகுசு, சமப்பகுதி, மலைப்பகுதி என்ற பாகுபாடுகளை கடந்து நன்றாக இயங்கும். எளிதாகவும், விரைவாகவும் இயக்குவதற்கேற்ப அனைத்து வசதிகளும் உள்ளன. கார் கதவுகளே பார்ப்பதற்கு ரசிக்கத்தோன்றும். மற்ற கார்களிலிருந்து வேறுபட்ட ஒரு நளினத்தை இதன் இயக்கத்தில் பார்க்க முடியும். காரை எங்காவது நிறுத்தினால், இதனுடன் 'செல்பி' எடுக்க நான், நீ என போட்டி போடுகின்றனர். ஐ லவ் மை பக்,''.
16-Jun-2025