உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / கிரெட்டா இ.வி., காருக்கு வாடகை பேட்டரி சேவை

கிரெட்டா இ.வி., காருக்கு வாடகை பேட்டரி சேவை

'ஹூ ண்டாய்' நிறுவனத்தின் 'கிரெட்டா இ.வி.,' மின்சார கார், முதல் முறையாக வாடகை பேட்டரி சேவையில் வந்துள்ளது. இதனால், இந்த காரின் அடிப்படை விலை ஏழு லட்சம் ரூபாய் குறைந்து, 10.99 லட்சம் ரூபாயில் கிடைக்கிறது. இச்சேவையில், 1 கி.மீ., பேட்டரி பயன்பாட்டுக்கு, வாடிக்கையாளர்கள் 3.90 ரூபாய் செலுத்த வேண்டும். 11 கி.வாட்., ஏ.சி., சார்ஜர் மட்டுமே கிடைத்த இந்த காருக்கு, தற்போது மாடலை பொறுத்து 7.4 கி.வாட்., வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பு கொண்ட இந்த காரில், 42 மற்றும் 51.4 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரிகள் கிடைக்கின்றன. முழு சார்ஜில், 420 முதல் 510 கி.மீ., வரை பயணிக்க முடியும். விலை ரூ.18.03 முதல் ரூ.23.82 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை