நெல்லுார் துறைமுகத்தில் சாகர் கப்பல் கட்டும் தளம்
புதுடில்லி: சாகர் டிபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு, ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தில் ஜூவல்லதின்னே மீன்பிடி துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க, 29.58 ஏக்கர் நிலத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. உலகளவில் முதல்முறையாக முழுதும் இயந் திரங்கள் மற்றும் தொழில்நுட்பங் களை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் கப்பல் கட்டும் தளத்தை சாகர் நிறுவனம் உருவாக்கும். இதற்கான ஒப்புதலை ஆந்திர அமைச்சரவை வழங்கியுள்ளது. கடல் மட்டத்திலும் கடலின் அடியிலும் தளங்களை பலப்படுத்த இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு மையம் செயல்பட துவங்கியவுடன், 'டிஜிட்டல் கடல் பகுதி'யாக இப்பகுதி மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நிகழ்நேர தகவல்களை வைத்து, தானே இயங்கும் வகையில் இங்கு அமைப்பு முறை வடிவமைக்கப்பட உள்ளது. இங்குள்ள ஆய்வு மையத்தின் வாயிலாக சரக்கு போக்குவரத்து, மீன் பிடித்தல், பருவநிலை கண்காணிப்பு, துறைமுக செயல்பாடுகள் ஆகியவையும் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.