உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / சீல், அட்டோ 3 பி.ஒய்.டி.,யின் அப்டேட்

சீல், அட்டோ 3 பி.ஒய்.டி.,யின் அப்டேட்

'பி.ஒய்.டி.,' நிறுவனம், அதன் 'சீல்' செடான் மற்றும் 'அட்டோ 3' எஸ்.யூ.வி., கார்களை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

சீல்

காரின் டிசைன் மற்றும் செயல்திறன் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. வெயில் தாக்கத்தில் இருந்து உட்புற கேபினை பாதுகாக்க, 'எலக்ட்ரானிக் சன்ஷேட்' வசதி, ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்டவை அடிப்படை அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. பி.ஒய்.டி.,யின் விசேஷ 'டிஸ்கஸ் - சி' சஸ்பென்ஷன்கள், தற்போது நடு ரக மாடல்களிலும் வழங்கப்படுகின்றன.

அட்டோ 3

இந்த காரில், 'லெட் ஆசிட்' பேட்டரிக்கு பதிலாக 'லித்தியம் அயான் பாஸ்பேட்' பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, சாதாரண பேட்டரியை விட 6 மடங்கு எடை குறைவாகவும், ஆயுட்காலம் 15 ஆண்டு காலம் வரை நீடிக்கும் என்றும் இந்நிறுவனம் கூறுகிறது. இம்முறை, முன்புறத்தில் வெண்டிலேட்டட் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு கார்களின் முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளன. சீல் காரின் விலை, ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும். அட்டோ 3 காரின் முதல் 3,000 முன்பதிவுகளுக்கு மட்டும் எந்த விலை மாற்றம் செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை