ஸ்கோடா கைலாக் டாடா, மஹிந்திராவுக்கு ஷாக்
'ஸ்கோடா' நிறுவனம், 'கைலாக்' என்ற புதிய எஸ்.யூ.வி., காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்நிறுவனத்தின் முதல் சப் 4 - மீட்டர் காம்பாக்ட் எஸ்.யூ.வி., காராகும்.இந்த காரின் தோற்றம், 'மினி குஷாக்' காரை போன்று காட்சி அளிக்கிறது. அதாவது, ஸ்கோடாவின் பாரம்பரிய 3 - டி பட்டர்பிளை கிரில், 17 அங்குல டூயல் டோன் அலாய் சக்கரங்கள், மெல்லிசான டெயில் லைட்டுகள், 'ஸ்கோடா' எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அடையாளம் ஆகியவை காரின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.உட்புறத்தில், 10 அங்குல டச் ஸ்கிரீன், 8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் டோன் கேபின், வென்டி லேட்டட் மற்றும் எலக்ட்ரானிக் சீட்டுகள், வயர்லெஸ் சார்ஜிங், சிங்கிள் பேன் சன் ரூப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.இந்த கார் 'ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா' கார்கள் உருவாக்கப்பட்டுள்ள 'எம்.க்யூ.பி., - ஏ.ஓ.,' கட்டமைப்பு தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடாஸ் பாதுகாப்பு இதில் வழங்கப்படவில்லை.இந்த காரின் முன்பதிவு டிசம்பர் 2ம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில், வரும் ஜனவரி 27ம் தேதி முதல் வினியோகம் தொடங்குகிறது.விலை: ரூ.7.89 லட்சம் முதல்டீலர்: KUN Skoda - 95660 69000
விபரக்குறிப்பு
இன்ஜின் 1 லிட்டர், 3 சிலிண்டர், டி.எஸ்.ஐ., பெட்ரோல்பவர் 115 ஹெச்.பி.,டார்க் 178 என்.எம்., டார்க்மைலேஜ் 12 முதல் 17 கி.மீ.,பூட் ஸ்பேஸ் 446 லிட்டர்